பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 4000 ரூபாயை சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாயை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாயாக 3 தவணைகளில் மத்திய அரசு விவசாயிகளுக்கு அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. பல்வேறு புதுமைகளை படைத்து வரும் மத்திய பிரதேச அரசு கூடுதலாக 4 ஆயிரம் ரூபாயை சேர்த்து 10,000 ரூபாயாக விவசாயிகளுக்கு வழங்க உள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னர் பேசுகையில், மாநிலத்தில் 77 லட்சம் விவசாயிகளுக்கு 3 தவனைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாநிலத்தில் வங்கி கணக்கு உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளின் நலனுக்காக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், அவர்களுக்கு மாநில அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் 2000 ரூபாய் அதாவது மொத்தம் ஆண்டுக்கு 4000 ரூபாய் கௌரவ நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கான பயிர் கடன்களை பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதத்தில் (Zero Percent Interest Rate) வழங்கும் திட்டத்தையும் மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தைப் போல், முதலமைச்சர் கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கான தகல்களை விவசாயிகள் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும் என ம.பி. மாநில தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெய்ன்ஸ் தெரிவித்தார். மேலும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் தகவல்கள் அனைத்தும் கிசான் சம்மான் நிதி போர்ட்டலில் பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க...
10 கோடி விவசாய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம்
விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments