1. செய்திகள்

ஆய்வுகளின் அடிப்படையில் TNAU தயார் செய்த மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Maize price forecast prepared by TNAU based on research!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2022-23 ஆம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் சுமார் 9.95 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 33 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. இந்திய மக்காச்சோளத்தை நேபாளம், வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், பூட்டான், மலேசியா மற்றும் வியாட்நம் ஆகிய நாடுகள் ஏற்றமதி செய்கின்றன. அர்ஜென்டினாவில் நிலவுகின்ற வறட்சி மற்றும் உக்ரைன் - ரஷ்யா நாடுகளிடையே நடைபெறும் போர் காரணமாக வரத்து குறைந்தாலும் உலகளாவிய சந்தையில், இந்திய மக்காச்சோளத்திற்கு மிகபெரிய தேவை இருக்கின்றது.

தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் 0.4 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.82 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளத்தின் வரத்தானது ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து குறைந்துள்ளது. அதனால் விலை ஏற்றமாக இருக்கும் என்று அறியப்படுகிறது.

விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் ஆடிப்படையில், பருவமழை இயல்பாக இருப்பின் தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது குவிண்டாலுக்கு சுமார் ரூ.2300 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

எனவே, விவசாயிகள் இம்முறை விலை முன்னறிவிப்புக்கு ஏற்றவாறு, நடவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் கோயம்புத்தூர்: 0422 2431405

இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி கோயம்புத்தூர்: 0422 6611278

தொழில் நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் கோயம்புத்தூர்: 0422 2450507

மேலும் படிக்க:

விவசாயிகள் இந்தியாவுடன் இணைய 'ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்டில்' உடன் இணையுங்கள்!

25000 ஊக்கத்தொகை! | UPSC|விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Maize price forecast prepared by TNAU based on research! Published on: 11 August 2023, 04:55 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.