காற்றோட்டம் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரவும் அபாயம் குறையும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாவது அலை இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
காற்றோட்டம் உள்ள இடத்தில் பாதிப்பு குறைவு அதில் காற்றோட்டம் நன்றாக இருக்கும் இடத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலமும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்துவதன் மூலமும் காற்றில் திரண்டுள்ள வைரஸ் சுமையைக் குறைத்து, பரவும் அபாயத்தையும், காற்றோட்டமான இடங்கள் குறைக்கின்றன, எனவே காற்றோட்டம் என்பது ஒரு சமூக பாதுகாப்பு. இது நம் அனைவரையும் வீட்டிலோ அல்லது வேலையிலோ பாதுகாக்கிறது. அலுவலகங்கள், வீடுகள் மற்றும் பெரிய பொது இடங்களில் வெளிப்புற காற்றை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அவசர முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிசைகள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பெரிய மையப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் மற்றும் நாசி நீர்த்துளிகள் வாயிலாக, சுவாசிக்கும் போதும், பேசும் போதும், பாடும் போதும், சிரிக்கும் போதும், இருமல் அல்லது தும்மல் மூலமும் வைரஸ் பரவுகிறது. அறிகுறிகளைக் காட்டாத, பாதிக்கப்பட்ட நபரும் வைரஸைப் பரப்புகிறார். மக்கள் தொடர்ந்து, இரட்டை முகக்கவசங்கள் அல்லது என்95 முகக்கவசங்களை அணிய வேண்டும்.
கொரோனா வைரஸ் மனித உடலைபாதிக்கிறது, அங்கு அது பெருக முடியும், ஹோஸ்ட் இல்லாத நிலையில் அது உயிர்வாழ முடியாது. மேலும், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வைரஸ் பரவுவதை நிறுத்தினால் நோயின் தொற்று வீதம் குறையும். அந்த வைரஸ் இறுதியில் இறக்கக்கூடும்.
தனிநபர்கள், சமூகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே இதை அடைய முடியும். முகக்கவசங்கள், காற்றோட்டத்தை அதிகரிக்க செய்தல் , சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!
Share your comments