அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்தது. வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கெளரவித்தார்.விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.
வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டுகிறது.
1860ம் ஆண்டு
பிரிட்டனின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகம் செய்தார். 1860ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியன்று இந்தியாவில் வரி விதித்த அவர், செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் வரி விதித்தார்.
சர் ஜேம்ஸ் வில்சன் நினைவாகவும், வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டும் விதமாகவும் வருமான வரி தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
ரஜினிக்கு விருது
இதையொட்டி , தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.
வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார்.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments