தரைக்காற்று காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வரும் 2ம் தேதி முதல், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
26.03.21
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே (Dry Weather) நிலவும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
27.03.21 முதல் 30.03.21 வரை
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வாகனம் பொதுவாக கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு (Maximum temperature forecast)
வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து, தமிழகப் பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க சாத்தியமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மதிய வேளையில் வெளியில் செல்லாமல் இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!
விவசாயிகள் போராட்டம்: இன்று பாரத் பந்த், வடமாநிலங்களில் ரயில், சாலை மறியல்..
Share your comments