தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியதிலிருந்தே புதிய புதிய திட்டங்களும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மக்களிடையே பல வரவேற்புகளும் பாராட்டுக்களும் குவித்து வருகின்றன. மேலும் தற்போது சுகாதாரத்துறையில் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு தற்போது மிகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதனால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, உயிரிழப்புகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் பிரிவு சார்பில் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, தேவையான மாத்திரைகள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தையும் கிராமப்புற மக்கள் வரை கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மருதுவக்கல்லூரிக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை கூறியபடி பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காலத்தில் நீரழிவு ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தமிழக முதலமைச்சர் கொடுத்த ஆலோசனையின் பெயரில் வீடுகளுக்குச் சென்று மாத்திரைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக 20 லட்சம் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் பணிகளை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரைவில் தொடங்க போவதாக பேட்டி அளித்தார்.
மேலும் படிக்க:
கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசம் - 1-ந்தேதி முதல் போடப்படுகிறது!
Share your comments