தமிழக முழுவதும் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது. இதனை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.
கடந்த வெள்ளி கிழமை சென்னையில் உள்ள கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனம் பங்குபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. பெரும்பாலானவர்கள் பங்கேற்று பயன் பெற்றார்கள். இதனை தொடர்ந்து இனிவரும் ஒவ்வொரு வெள்ளி கிழமைகளில் எல்லா மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கு பெறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இன்று அனைத்து மாவட்டங்களிலும் கிண்டி வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடை பெறுகிறது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வேலை கிடைக்க வாய்ப்புள்ளதால் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறார்கள்.
35 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கு பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கல்வி தகுதி குறைந்த பட்சமாக 8 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டு கொள்ள படிக்கிறார்கள். படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட இதில் கலந்து கொள்ளலாம். டிரைவர் லைசென்ஸ் உள்ளவர்கள் கூட கலந்து கொள்ளலாம். பங்கு பெரும் நிறுவனகள் பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபரை எதிர்பார்க்கின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொண்டு விருப்பமான பணியினை தேர்வு செய்யும்படி கேட்டு கொள்கிறார்கள்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி கிடைப்பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார். பங்கு பெறும் தனியார் நிறுவனங்கள் காலி பணியிட விவரங்கள் அனைத்தையும் வேலைவாய்ப்பு அலுவலககத்தில் தெரிவிக்கும் படி கேட்டு கொண்டார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.
Anitha Jegadeean
Krishi Jagran
Share your comments