அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அமைச்சர் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவருடன் வந்தவர்களும் தற்போது நலமாக உள்ளனர்.
அமைச்சர் வருகை
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கு வருகை தந்தார்.
லிஃப்ட் பயணம்
அவர் மருத்துவமனையின் கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரவு துறை கட்டடத்தில், ஒவ்வொரு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு, கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிப்டில் (Lift) ஏறினார்.
திடீர் தடை
அவர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது. அப்போது அவருடன் மருத்துவர்கள் உள்பட பலரும் இருந்தனர். லிப்ட் நின்றதால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மீட்பு
பின்னர் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் அங்கிருந்த ஊழியர்கள் உயர்ந்த மேஜைக்கொண்டு வந்து, லிப்ட் அருகில் வைத்து லிப்ட் கதவை திறந்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடக்கம்
முன்னதாக, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று, இந்தியாவிலேயே முதன் முறையாக கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு (MCH), white coat ceremony மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியன தொடங்கி வைக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் எத்தனை புதிய அதி நவீன வசதிகள் கொண்டுவரப்பட்டாலும், இதுபோன்ற லிஃப்ட் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments