விவசாயிகளுடன் எம்எல்ஏக்கள் ஒரு நாள் என்ற புதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விவசாயிகளிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை (Tamil Nadu Legislature)
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
குறைகள் கேட்பு (Complaints hearing)
இதில், வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:
விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்குச் சென்று, விவசாயிகள் குறைகளைக் கேட்டுத் தீர்வு காண வேண்டும்.
மாதம் ஒரு நாள் விவசாயிகளை சந்திப்பதுடன், அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
தோட்டக்கலைக் கல்லூரி (College of Horticulture)
தற்போது, வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதியதாக அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.
ரூ.30 கோடி நிதி (Rs.30 crore fund)
வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022ம் ஆண்டில், கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
SC/ST விவசாயிகளுக்கு 100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசன வசதி!
Share your comments