நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடப்பமந்து சாலையில் நவீன தொழில்நுட்பத்துடன் மண் சரிவை (Soil Slides) தடுத்தலை (மண் ஆணிப் பொருத்தி நீர் விதைக்கும் முறை) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு துவக்கி வைத்தார்.
மண் சரிவு (Soil Slides)
பருவ மழையின் போது ஏற்படும் வெள்ள பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. மண் சரிவை தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மண் ஆணிப் பொருத்தி நீர் விதைக்கும் முறையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு மண் சரிவை தடுக்க, இந்த நடைமுறையை டில்லி ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவின் ஆலோசனைப்படி நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், 4170 இடங்களில் இந்த முறை ஏற்படுத்தப்படவுள்ளது. நீலகிரியில், 284 இடங்களில் மண் சரிவு தடுத்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பம் (Modern Technology)
மண் அரிப்பைத் தடுக்கும் இந்த நவீன தொழில்நுட்பம், பருவமழை நேரத்தில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் உதவிகரமாக இருக்கும். மண் அரிப்பைத் தடுத்து விட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளையும் நிச்சயமாக தடுத்து விட முடியும்.
மேலும் படிக்க
Share your comments