தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது.
நெல் கொள்முதல்:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் (Consumer Goods Corporation) பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் (Food Corporation of India) சார்பாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. நெல் கொள்முதல் செய்வதற்காக மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) வழங்குகின்றன. நடப்பாண்டு அக்டோபர் 1-இல் துவங்கிய நெல் கொள்முதல் சீசன் 2021 செப்டம்பரில் முடிகிறது. இந்த சீசனில் மத்திய அரசு 17 சதவீதம் வரை ஈரப்பதம் (Moisture) உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வாணிப கழகத்திற்கு அனுமதி வழங்கியது.
நெல்லின் ஈரப்பதம் உயர்வு:
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததால் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வாணிப கழகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து மத்திய உணவுத் துறை அதிகாரிகள் (Federal Food Department officials) ஒரு மாதத்திற்கு முன் தமிழகம் வந்து நெல்லின் மாதிரியை பரிசோதித்தனர். தற்போது மத்திய அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி வாணிப கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இனி அந்த அளவிற்கு ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், வனவிலங்குகளை விரட்ட மருந்து கண்டுபிடிப்பு!
குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும்! புதிய சட்டம் இயற்ற விவசாயிகள் கோரிக்கை!
Share your comments