மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில் தங்கள் குட்டியைக் கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில், 250க்கும் மேலான நாய்களை குரங்குகள் கொலை செய்திருப்பது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் பாசம் (mother's love)
மனிதனாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் தாய்ப்பாசம் ஒன்றுதான். தன் குழந்தைக்கு பிரச்னை என்று வந்துவிட்டால், கொதித்துப்போவது மட்டுமல்லாமல், கொலை செய்யவும் தயங்காது தாய் மனம். இதற்கு விலங்குகள் மட்டும் விதிவிலக்கல்ல. இப்படியொரு சம்பவம் பீட் மாவட்டம் மஜல்கான் கிராமத்தில் நடந்திருக்கிறது.
250 நாய்கள் (250 dogs)
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. ஒரு குரங்குக் குட்டியை கடந்த மாதம் சில நாய்கள் சேர்ந்து கொன்றன. அதற்கு பழிவாங்க குரங்குகள் இதுவரை 250க்கும் மேலான நாய்களை கொன்று குவித்துள்னன.கட்டடம் மற்றும் மரங்களின் உச்சிக்கு நாய்களை இழுத்துச்சென்று, பின் அங்கிருந்து கீழே தள்ளி குரங்குகள் கொல்கின்றன.
குழந்தைகளுக்குக் குறி (Mark for children)
அடுத்ததாக பள்ளி செல்லும் குழந்தைகள் மீதும் குரங்குகள் தாக்குதலைத் துவங்கி உள்ளன. அவற்றிடம் இருந்து எங்களைக் காப்பாற்றும்படி வனத்துறையினரிடம் கேட்டோம். நாள் முழுவதும் போராடியும் ஒரு குரங்கும் அவர்களிடம் சிக்கவில்லை. இதனால் அதிக அச்சத்தில் உள்ளோம்.
பிரச்னைக்குத் தீர்வு காண, அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எதிர்பார்ப்பு (Anticipation)
எது எப்படியோ, இந்த கிராமமக்களின் படும் சிரமத்தைக் கருத்தில்கொண்டு வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments