வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்...
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு சென்டிமீட்டரில் (Rain fall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவலோகம் (கன்னியாகுமரி) 6, சித்தார் (கன்னியாகுமாரி) 4,பெருஞ்சாணி (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 3, பெரியாறு (தேனி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), வால்பாறை (கோவை), குழித்துறை (கன்னியாகுமரி), கூடலூர் (தேனி), சின்னக்கல்லார் (கோவை), சுரலாக்கோடு (கன்னியாகுமரி) தலா 2
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fishermen warning)
-
இன்று கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
-
மத்திய கிழக்கு, வட கிழக்கு , தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
-
இன்று மற்றும் நாளை தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு (Tides warning)
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 24.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் 3.5 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
மேலும் படிக்க ....
பண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments