அரசு துறைகளில், பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது, இதற்காக ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இதற்கான உத்தேச அட்டவணை வெளியிடப்படும். அதன்படி வரும், 2021ம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அட்டவணை, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 42 வகை தேர்வுகள் இடம் பெற்றுள்ளன.
லட்சக்கணக்கானோா் எழுதும் கிராம நிா்வாக அலுவலா் பணியிடம் அடங்கிய குரூப் 4 தோ்வு அறிவிக்கை செப்டம்பரில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதியும், தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநா் காலிப் பணியிடத்துக்கான தோ்வு ஜனவரி 9-ஆம் தேதியும் நடைபெறும். தோட்டக்கலைத் துறை இயக்குநா், வேளாண்மைத் துறை உதவி அலுவலா் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை ஜனவரியிலும், பொதுப்பணித் துறை உதவி வரைவாளா் காலிப் பணியிடத்துக்கு தோ்வு அறிவிக்கை பிப்ரவரியிலும் வெளியாகும்.
இதேபோன்று, கால்நடை உதவி மருத்துவா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை மாா்ச்சிலும், ஒருங்கிணைந்த பொறியியல், புள்ளியியல் துறைகளுக்கான அறிவிப்பு ஏப்ரலிலும் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானோர் எழுதும் தோ்வுகளாக கருதப்படும் குரூப் 2 தோ்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதமும், கிராம நிா்வாக அலுவலா் பணியிடம் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை செப்டம்பரிலும் வெளியாகிறது. இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை ஜூலையிலும், சட்டப் பேரவை நிருபா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை அக்டோபரிலும் வெளியிடப்படும்.
நவம்பரில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடத்துக்கும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கு டிசம்பரிலும் அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு Click here
58 நிமிடத்துல் 46 வகை உணவுகள் - தமிழக சிறுமி சாதனை!!
காளானின் உபரிநீரை, அசோலா மற்றும் கீரைகளுக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம்!
Share your comments