தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளான கோயம்பத்தூர்,மற்றும் நீலகிரி மாவடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவலாஞ்சியில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக 2136 மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 28 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன.
சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும் போது, " தென் மேற்கு பருவ மழையானது கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. ஈரப்பதத்துடன் கூடிய தென் மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மோதி வீசக்கூடிய நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால், அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு மலைப் பகுதிகள் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ஆகிய இடங்களிம் மிக கனமழை தொடரும்.மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 91 செ .மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
அன்டை மாநிலமான கேரளாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 40 -க்கு மேற்பட்ட மக்கள் மழையினால் இறந்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் 738 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக தென்னக ரயில்வேயானது தமிழ்நாட்டில் இருந்து கேரளா வரை செல்லும் சில முக்கிய ரயில்சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில் விவரங்கள்
வண்டி எண் : 16791/16792 திருநெல்வேலி – பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ்
வண்டி எண் : 16101/16102 சென்னை எக்மோர் - கொல்லம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் : 56737/56738 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் சேவை
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments