தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA)இபடான், நைஜீரியா இடையே வாழையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழையில் வீரிய இரகங்கள் உற்பத்தி மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கோ 1 மற்றும் கோ 2 வாழை வீரிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீரிய இரகங்கள் மலை வாழை மற்றும் நெய்பூவன் இரகங்களை ஒத்த இயல்புடையது. கூடுதலாக மூன்று முன்வெளியீட்டு கலப்பின வாழை இரகங்கள் NPH-02-01, H96/7 மற்றும் H 531 தற்பொழுது பல இடமதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.
நைஜீரியாவில் (இபடான்) உள்ள சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வாழை, மரவள்ளி, தட்டைப்பயிர், மக்காச்சோளம், சோயாபீன் கருணைக்கிழங்கு ஆகிய பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA)இபடான் நைஜீரியா இடையே வாழையில் கூட்டுஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் மற்றும் நைஜீரியாவின் IITA துணை இயக்குனர் முனைவர் டாஷூயல் கெண்டன் ஆகியோர்கள் முன்னிலையில் 26.01.2021 அன்று கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் முனைவர். அ.சு.கிருட்டிணமூர்த்தி, முதன்மையர் (தோட்டக்கலை) முனைவர். இல.புகழேந்தி, முதன்மையர்; (வேளாண்மை) முனைவர் எம். கல்யாணசுந்தரம், பேராசிரியர் மற்றும் தலைவர் (பழ அறிவியல் துறை) முனைவர் மு.சை. அனீசா ராணி மற்றும் பேராசிரியர் முனைவர் எம்.ஆர் துரைசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...
வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்!
வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31
மாதம் ரூ. 9,000 ஓய்வூதியம்! முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்!
Share your comments