பொதுமக்கள் இன்று பிறப்பு, இறப்பு, இருப்பிடம் என பலவித சான்றிதழ்கள் (Certificates) பெற அரசு அலுவலகத்திற்கும், இ-சேவை மையத்திற்கும், நெட் சென்டர்களுக்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையை மாற்ற திட்டமிட்ட, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன், நடமாடும் இ-சேவை மையத்தை (Moving E-Service Center) துவக்கியுள்ளார்.
நடமாடும் இ-சேவை மையம்:
நடமாடும் இ-சேவை மையத்தின் துவக்க விழா, ஈச்சனாரியில் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த, 100 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு (Medical insurance) திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட பார்வையாளர் மோகன் மந்த்ராச்சலம், செயலாளர் சந்திரசேகர், அமித்ஷா பேன்ஸ் கிளப் மாநில தலைவர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.
திட்டத்தின் அம்சங்கள்:
கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர், பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம், சாதி, பட்டா, சிட்டா பெறுதல், ரேஷன் கார்டுக்கு (Ration Card) பதிவு செய்தல், விலாசம் மாற்றம், விவசாயிகளை மத்திய அரசின் திட்டங்களில் இணைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். இரு வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் அலைச்சலை தவிர்ப்பதே, இதன் முக்கிய நோக்கம்.
நடமாடும் இ-சேவை மையம், பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும். இனி, வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் அலைச்சல் இருக்காது. இத்திட்டம் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில், நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இனிப்பு வகைகளைப் பரிசோதிக்க, நடமாடும் உணவுப் பரிசோதனை கூடம்!
சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!
Share your comments