மதுரை மக்கள் உட்கொள்ளும் உணவின் தரத்தை (Quality) பரிசோதிக்க, நடமாடும் சோதனை கூடத்தை உணவு பாதுகாப்பு துறை (Department of Food Safety) அறிமுகம் செய்துள்ளது.
நடமாடும் உணவு கூடம்:
மாநிலத்திற்கு இரு நடமாடும் பரிசோதனை கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கும், மதுரைக்கும் அவை கிடைத்துள்ளன. இரு மாவட்டங்களுக்கும் பரிசோதனை கருவிகள் (Testing tools) அடங்கிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதை அனைத்து நகரங்கள், கிராமங்களுக்கும் கொண்டுச் செல்ல முடியும். மக்கள் வெளியில் வாங்கி உட்கொள்ளும் உணவுகள் தரமானது தானா என அறிய விரும்பினால் மாதிரிகளை (Samples) இக்கூடத்தில் பரிசோதிக்கலாம்.
மலிவு விலை கட்டணம் நிர்ணயிக்கப்படும். விரைவில் களப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் (Somasundaram) கூறியதாவது: தற்போது கோவா என்னும் பால் (Milk) பொருளின் தரத்தை அறிய தற்காலிகமாக இப்பரிசோதனை கூடங்களை பயன்படுத்துகிறோம். சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மீன், பால், முட்டை, இறைச்சி, உணவு, தின்பண்டங்கள் என அனைத்து வகை உணவுப் பொருட்களின் தரத்தையும் உடனுக்குடன் மக்கள் அறிய முடியும் என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இனி கடற்கரை மணலிலும் விவசாயம் செய்யலாம்! தாவரவியல் பேராசிரியர் கண்டுபிடிப்பு!
Share your comments