கைவினை பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கயிறு பொருட்களினால் செய்யப்பட்ட பொருட்கள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டிலும் நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களைத் தாண்டி, பிற பகுதிகளிலும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கயிறுப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டில் அதிகப்படுத்த, மத்திய அரசின் கயிறு வாரியம் மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களில் விற்பனை மையங்களை அமைத்துள்ளது. விற்பனையினை அதிகப்படுத்தவும், அனைத்து தரப்பினர் பயன்படுத்துவதற்கு எதுவாகவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பாரம்பரிய தொழில்கள் மீள் உருவாக்க நிதித் திட்டத்தின் (எஸ்எஃப்யுஆர்டிஐ) கீழ் ஏற்கனவே 40 ற்கு மேற்பட்ட கயிறு தொழில் தொகுதிகளை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 16 தொகுதிகள் செயல் பட தொடங்கி உள்ளன என்றார். இதற்காக சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் புதிய விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு பழைய விற்பனை மையங்களை புதுப்பித்து வருகிறது. அதன் படி இந்தூர், நவி மும்பை, லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் வாரணாசி போன்ற இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் கயிறு வாரியத்தால் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டன. சென்னை, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது.
கயிறு உற்பத்தித் தொழிலை இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நவீனப்படுத்தும் நோக்கில், பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கயிற்றால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும், குறிப்பாக துணி வகைகளுக்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறப்பட்டிருப்பதுடன், கதர் கிராமத் தொழில் கழகத்துடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் தொழில் துறை கண்காட்சிகளில் கயிறு பொருட்களை கயிறு வாரியம் இடம்பெறச் செய்து வருகிறது.
Share your comments