மதுரை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் பல்பயிர் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்படும் புதிய பயிர் ரங்கள் அந்த பூங்காவில் பயரிடப்பட்டு அதன் வளர்ச்சி, திறன், மகசூல் உற்பத்தி போன்றைவைகளை ஆய்வு செய்யும், அவைகளை நேரடியாக எந்த நேரமும் விவசாய பெருமக்கள் பார்வையிடும் வகையில் பல்பயிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நேரடி செயல் விளக்கம் கிடையாது
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் புதிய பயிர் ரகங்கள், அதன் விதைகள் தமிழகம் முழுவதும் வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும், அதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், ஆலோசனைகளை அங்குள்ள வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளுக்கு வழங்குவர். ஆனால், அந்த பயிர்களின் வாழ்வியல் குறித்து நேரடியாக செயல் விளக்கம் காட்டும் வசதி கிடையாது.
பல்பயிர் பூங்கா
இந்நிலையில், தற்போது முதல் முறையாக புதிய பயிர் ரகங்களை குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்து, அதில் அதிக மகசூல் ஏற்படுத்தி விவசாயிகளிடையே அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏதுவாக மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய வேளாண் பண்ணையில் பல் பயிர் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில், தற்போது கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக்தால் சமீபத்தில் வெளியிட்ட ரகங்கள், சூரியகாந்தி(கோஎச்-3), நிலக்கடலை (டிஎம்வி-14), பாசிப்பயிறு (விபிஎன்4), தட்டைப்பயிறு (விபிஎன்-3), தீவன தட்டைப்பயிறு(கோ9), வரகு(டிஎன்ஏயூ 86), சோளம்(சிஒ 32) போன்றவை பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளை கொண்டு பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பல்லுயிர் பூங்காவை விவசாயிகள் எந்நேரமும் வந்து பார்வையிட வரலாம். அதில் பயிரிடப்பட்டுள்ள ரகங்களையும், அதன் பயன்களையும் கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டு பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்பயிர் பூங்காவின் நோக்கம்
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வி ரமேஷ் மற்றும், தொழில்நுட்ப வேளாண் வல்லுநர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறியதாவது, மதுரை வேளாண் அறிவியல்நிலைய வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள், கிராமபுற இளைஞர்கள், வேளாண் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நேருக்கு நேர், இந்த பல் பயிர் பூங்காவில் சந்தித்து பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களான பயிர் சாகுபடி நில தயாரிப்பு , விதை அளவு, விதைக்கும் இடைவெளிகள், உரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை நேரடியாக பார்ததும் கேட்டும் தெரிந்து கொள்ளச் செய்வதே இந்த பூங்கா அமைப்பதின் முக்கிய பணியாகும் என்றார்.
பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப பருவத்திற்கேற்ற பயிர் ரகளைங்களைத் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளைக் கொண்டு, இந்த பல் பயிர் பூங்காவில் பயிர் சாகுபடி செய்து, அதில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பதை விவசாயிகளுக்கு நேரடியாக செயல்விளக்கம் செய்து காட்டுவதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
Share your comments