நாட்டில் பெரும்பாலான இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு பிரகடணத்தை உருவாக்கியிருக்கின்றன. அதில் இந்தியா என்ற பெயர் மாற்றப்படும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இங்கு வசிக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது, இந்தியும், சமஸ்கிரதமும் தான் ஆட்சி மொழியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாக வைகோ எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தெற்கே ஒரு தலைவர் இருக்கிறார் எனில் அது திருமாவளவன் தான்.
சனாதன சக்திகளுக்கு இந்தியாவில் யார் முதல் எதிரி என்று கேட்டால் அது திருமாவளவன் தான்.
எந்த காலத்திலும் இல்லாத ஆபத்து இந்தியாவை சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒற்றை இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எந்த காலத்தில் இருந்தது ஒரே இந்தியா? யாரும் தெற்கே காலடி வைத்தது கிடையாது.
தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள். அதை எதிர்த்து தென் இந்தியாவிற்கு தலைமை தாங்க ஸ்டாலின் இருக்க வேண்டும் என்றும், அவருக்கு பக்கபலமாய் இருப்பேன் என்று சொன்னார் திருமா. அதை நானும் இங்கே வழிமொழிகிறேன்.
மேலும் படிக்க:
Share your comments