தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அமோக வெற்றி (Amoka wins)
தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு (Supported by MLAs)
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள், மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்தனர்.
ஆளுநர் அழைப்பு (Call of the Governor)
இதற்கானக் கடிதத்தை, ஆளுநர் பன்வாரிலால் புராஹித்திடம் வழங்கி தம்மை ஆட்சி அமைக்க வருமாறு மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திறந்தவெளி பகுதியில் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஸ்டாலின் பதவியேற்பு (Stalin's inauguration)
சரியாக இன்று காலை 9மணியளவில், பதவிஏற்பு விழா நடைபெற்றது. இதில், முத்துவேல். கருணாநிதி.ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
33 அமைச்சர்கள் (33 Ministers)
அதன் பிறகு புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக பெயர் சொல்லி அழைத்து பதவி ஏற்க வைத்தார். அதன்படி துரைமுருகன், கே.என். நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், உட்பட 33 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
2 பெண் அமைச்சர்கள் (2 female ministers)
அமைச்சரவையில் பி.கீதா ஜீவன், என்.கயல்விழி செல்வராஜ் என இரண்டு பெண்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 200 பேருக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரிந்த சினிமா நட்சத்திரங்கள்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
Share your comments