விவசாகிகளை மகிழ்விக்கும் வகையில் நெல், பருப்பு வகைகள் மற்றும் தனியங்களுக்கு குவிண்டாலுக்குயினை நிர்ணயித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு கூட்டத்தில் இதற்கான முழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்கான காரிஃப் பருவத்துக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயத்துள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோதர் வெளியிட்டார். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 3.5% உயர்த்தியுள்ளது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 65 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ 1,815 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று மற்ற தானியங்கள், பருப்பு வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உள்ளது.
உயர்த்த பட்ட மற்ற பயிர்களின் விவரங்கள்
சோளம் - ரூ 120
ராகி - ரூ 253
துவரம் பருப்பு - ரூ 215
பாசி பருப்பு - ரூ 75
உளுத்தம் பருப்பு - ரூ 100
நிலக்கடலை - ரூ 200
சோயபின் - ரூ 311
நடுத்தர ரக பருத்தி - ரூ 105
நீண்ட ரக பருத்தி - ரூ 100
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments