தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கீ.செ. சுப்ரமணியன் (Subramaniyan) அவர்களுக்கு, தேசிய உர உற்பத்தியாளர்கள் குழுமத்தின் 50-வது ஆண்டு நிறைவிற்கான தேசிய அளவிலான விருது (National Award) புதுடெல்லியில் 07.12.2020 அன்று நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் (Agriculture Seminar) வழங்கப்பட்டது. இது, வேளாண் பல்கலைக்கழகத்திற்கும், நானோ தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைவதுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் பெருமை சேர்த்துள்ளது.
வேளாண் விஞ்ஞானிகளின் முக்கியத்துவம்:
தேசிய விருதினை மாண்புமிகு மத்திய உரத்துறை அமைச்சர் ஸ்ரீ மன்சுக் மண்டாவியான் (Sri Mansuk Mandaviyan) அவர்கள் மேற்கொண்ட கருத்தரங்கில் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். இக்கருத்தரங்கில் வேளாண் விஞ்ஞானிகளின் முக்கியத்துவத்தையும், அவர்களால் உருவாக்கப்படும் தொழில் நுட்பங்களினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பேசப்பட்டது. மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட நானோ அறிவியல் (Nano Science) மற்றும் தொழில்நுட்ப துறை பற்றி வெகுவாக பாராட்டினார்கள்.
நானோ அறிவியல் தொழில்நுட்பம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் (N. Kumar) அவர்களும், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கே.எஸ். சுப்ரமணியன் அவர்களை விருது பெற்றமைக்காக நேரடியாக வாழ்த்தி சிறப்பித்தார்கள். மேலும், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் விவசாயப் பெருமக்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக இத்துறை விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களின் ஆலோசனை படி, நானோ தொழில்நுட்பங்களான பழங்களை பாதுகாக்க எக்சனால், நானோ எமல்சன், நானோ ஸ்டிக்கர் (Nano Sticker), நானோ சேனிடைசர் (Nano Sanitizer), இலையின் ஈரத்தன்மையும், தழைச்சத்தையும் அறிய சென்சார்கள் (Sensors) மற்றும் கொடிய பூச்சி அல்லது பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் ஆகியவை செயல்முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தகவல்: மக்கள் தொடர்பு அலுவலர்
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!
Share your comments