கோவிட் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்' என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) எச்சரித்துள்ளது.
உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கோவிட் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. நம் நாட்டில் கோவிட் முதல் அலை கடந்தாண்டு மார்ச்சில் துவங்கி, அக்., வரை இருந்தது; அதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால், கோவிட் தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக, இந்தாண்டு மார்ச்சில் 2வது அலை பரவத் துவங்கியது. ஏப்., மற்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. அதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.
கோவிட் 3வது அலை
கோவிட் தொற்று குறைந்தாலும் இந்தியாவில், 'கோவிட் 3வது அலை (Covid 3rd wave) பரவும் அபாயம் உள்ளது' என, டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக, 'கோவிட் 3வது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 1 சதவீதமாய் குறைந்தது!
இதை உறுதிப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ.,) கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) பிரதமர் அலுவலகத்திற்கு (பி.எம்.ஓ.,) சமீபத்தில் அளித்த அறிக்கையில், 'கோவிட் -பெருந்தொற்றின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்' எனத் தெரிவித்துள்ளது.
அலட்சியம் வேண்டாம்!
'முதல் அலையின் பரவல் குறைந்ததும், இனி பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் மக்கள் காட்டிய அலட்சியம் தான், 2வது அலைக்கு வழிவகுத்தது. அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளனர். முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் 3வது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்' என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க
நரம்பு மண்டலத்தை பாதிக்குமா கொரோனா வைரஸ்? மருத்துவர் விளக்கம்!
Share your comments