Nationwide farmers protest on March 21
மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் மார்ச் மாதம் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா'வின் தொடர் போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டது. அப்போது, மத்திய அரசின் சார்பில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு அமைப்பது, விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
விவசாயிகள் போராட்டம் (Farmers Protest)
இந்நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், வாக்குறுதிகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, 21ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், தலைநகரில் விவசாயிகள் ஓராண்டாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். பிறகு, மத்திய அரசும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அளித்து, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
தற்போது வரை மத்திய அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து வருகின்ற மார்ச் 21 ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
மேலும் படிக்க
மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!
Share your comments