சென்னை மாநகராட்சி, குப்பையை சரியான முறையில் கையாள பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், குப்பைகளை (Dust) தரம் பிரித்து, இயற்கை உரங்கள் தயாரிக்க முன்வந்துள்ளது. சென்னை மாநகராட்சி. மட்கும் மற்றும் மக்காத குப்பைகளை சிறப்பான முறையில் கையாளப்படுவதோடு, விவசாயத்திற்கும் இயற்கை உரம் (Natural Compost) கிடைக்கிறது. இதற்காக இயற்கை உரம் தயாரிப்பு கூடங்களை சென்னையில் துவக்கி வருகிறார்கள்.
இயற்கை உரம் தயாரிப்பு கூடம்
வேளச்சேரியில் அமைக்கப்பட்ட, 'நானோ (Nano)' என்ற சிறிய வகை, இயற்கை உரம் தயாரிப்பு (Natural fertilizer production) கூடம், நேற்று திறக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, குப்பையை கையாள பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம், எரிவாயு, தேங்காய் நார் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. பொதுமக்கள், வீட்டு குப்பையை தரம் பிரித்து வழங்குவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால், குறிப்பிட்ட இடத்தில், 'நானோ' என்ற சிறிய வகை, இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதலில், அடையாறு மண்டலத்தில், 182வது வார்டில் துவங்கப்பட்டது. இதையடுத்து, 177வது வார்டு, வேளச்சேரி, ஏரிக்கரை சாலையில், 5 லட்சம் ரூபாய் செலவில், இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டது.
விழிப்புணர்வு ஓவியம்
இயற்கை உரக் கூடத்தை அழகுபடுத்த, டயரில் பூந்தொட்டிகள், சுவரில் விழிப்புணர்வு ஓவியம் (Awareness painting), துர்நாற்றம் வீசாமல் இருக்க காற்றோட்ட வசதி போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட்டது. நேற்று, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ், இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தை திறந்து வைத்தார். இங்கு, வீட்டில் தரம் பிரித்த மக்கும் குப்பை வாங்கப்படும். இயற்கை உரம் விற்பனையும் (Sales) நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!
Share your comments