தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) முகலாய சாம்ராஜ்யத்தின் அத்தியாயங்களை கைவிட்டு 12 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகம் உட்பட பல்வேறு வகுப்புகளுக்கான புத்தகங்களை திருத்தியுள்ளது. நாடு முழுவதும் NCERT பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தும்.
12ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகமான 'இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்-பகுதி 2'லிருந்து, 'Kings and Chronicles: the Mughal Courts' (c. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்)' அகற்றப்பட்டன. இதைப் போலவே, இந்தி பாடப்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள் மற்றும் சில வரிகளும் NCERT நீக்கியுள்ளது. NCERT இன் படி, அனைத்து சமீபத்திய மாற்றங்களும் தற்போதைய கல்வி அமர்வு 2023-2024 முதல் பொருந்தும்.
வரலாறு மற்றும் ஹிந்தி பாடப்புத்தகங்கள் தவிர, 12 ஆம் வகுப்பு குடிமையியல் புத்தகத்தையும் NCERT திருத்தியுள்ளது. 'உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்' மற்றும் 'பனிப்போர் சகாப்தம்' என்ற இரண்டு அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களில், 'சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல்' என்ற 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து, 'மக்கள் இயக்கங்களின் எழுச்சி' மற்றும் 'ஒரு கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்' என்ற தலைப்பில் உள்ள இரண்டு அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
NCERT 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு 'ஜனநாயக அரசியல்-2' புத்தகத்தில் இருந்து 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை,' 'மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்,' மற்றும் 'ஜனநாயகத்தின் சவால்கள்' உள்ளிட்ட அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
11 ஆம் வகுப்பு புத்தகமான 'உலக வரலாற்றில் தீம்கள்' புத்தகத்தில் இருந்து 'மத்திய இஸ்லாமிய நிலங்கள்,' 'கலாச்சார மோதல்' மற்றும் 'தொழில் புரட்சி' போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றங்களை உறுதிப்படுத்திய மூத்த அதிகாரிகள், இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
எந்த மாநிலங்கள் NCERT புத்தகங்களைப் பின்பற்றுகின்றன?
இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், கோவா, திரிபுரா, டெல்லி, குஜராத், ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் 1 ஆம் வகுப்பு முதல் NCERT புத்தகங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
மேலும் படிக்க:
ஏறத்தாழ 9 கோடி புத்தகம் கொண்ட இலவச ஆன்லைன் புத்தக களஞ்சியம்!
இந்த கோடைக்கு, இந்த புதிய பிசினஸ் கைகொடுக்கும்: மானியமும் பெறுங்கள்!
Share your comments