கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி தொற்று பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரவல் அதிகரிப்பு (Increase in spread)
மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வருகைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு ஆயிரங்களைக் கடந்துவருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி தொற்று பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வருகைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு ஆயிரங்களைக் கடந்துவருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இவ்வாறாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
13,990 பேருக்கு
அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி, மொத்தம்1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 13,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 9ம் தேதி 12,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மறுநாள் மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக
சென்னையில் தினசரி பாதிப்பு 6190-ஆக உள்ளது. செங்கல்பட்டில் 1696 பேருக்கும், கோவையில் 602 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 508 பேருக்கும், திருவள்ளூரில் 1054 பேருக்கும், திருப்பூரில் 238 பேருக்கும், வேலூரில் 236 பேருக்கும், தூத்துக்குடியில் 176 பேருக்கும், திருச்சியில் 348 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் (Discharge)
10ம் தேதி 2547 பேர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது என்பது நமக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 10ம் தேதி மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62,767 ஆக உயர்ந்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு
தமிழகத்தில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. 179 பேர் ஒமைக்ரான் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!
Share your comments