பொது மற்றும் பல் மருத்துவத்திற்கான இளங்கலை கல்வியில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி இந்தியா முழுவதும் நடை பெறுகிறது.இந்த தேர்வுக்கான வீண்ணப்பபடிவம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கு பெறலாம் என வந்த அறிவிப்பை தொடர்ந்து விண்ணப்பத்திற்கான கால அவகாசம் டிசம்பர் 7 வரை நீட்டிக்க பட்டது. இந்த தேர்வானது மே 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டினை www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளத்திலிருந்து இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வானது நாடு முழுவதும் 154 நகரங்களில் நடைபெறுகிறது. சென்ற ஆண்டு 136 நகரங்களில் மட்டுமே நடை பெற்ற நிலையில், இம்முறை மாணவர்களின் வசதிக்காக 18 நகரங்கள் கூடுதலாக சேர்க்க பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இத்தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 14 மையங்களிலும், பாண்டிச்சேரியில் ஒரு தேர்வு மையத்திலும் தேர்வு நடை பெறவுள்ளது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடை பெற உள்ளது.
11 இந்தியா மொழிகளில் தேர்வு நடை பெற உள்ளது.ஆங்கிலம், இந்தி, உருது மொழியினை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு அனைத்து நகரங்களிலும் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில மொழிகளை தேர்தெடுத்த மாணவர்களுக்கு அந்ததந்த மாநிலங்களில் எழுதும் வகையில் வழி வகை செய்துள்ளது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தற்போது தேர்வு மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Share your comments