எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
நீட் (NEET)
நீட் தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (செப்., 7) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://neet.nta.nic.in இல் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91 ஆயிரத்திற்கும் அதிமான எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 26,773 பிடிஎஸ் இடங்களுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43,915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48,012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன. இதற்கான கலந்தாய்வை, மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் 7-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 8.70 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர்.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் சூப்பர் திட்டம்: கூட்டுறவுத் துறையின் முக்கிய அறிவிப்பு!
பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி: சூப்பர் ஆஃபர்!
Share your comments