நாடுமுழுவதும் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் முடிவுகள் வெளியாகிவிட்டன, இணையதள குறித்த தகவலுக்கு பதிவை தொடருங்கள்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) 2022 முடிவு ஜூன் 1 புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் NEET PG 2022 முடிவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- nbe.edu.in இல் பார்க்கலாம் என அறுவுறுத்தப்படுகிறார்கள்.
NEET PG 2022 தேர்வு மே 21 அன்று 849 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மருத்துவ நுழைவுத் தேர்வில் மொத்தம் 1,82,318 பேர் எழுதினர். NBE NEET PG தகுதி பட்டியலை தனியாக வெளியிடும். NEET PG 2022 தனிப்பட்ட மதிப்பெண் அட்டைகள் ஜூன் 8 முதல் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. NEET PG 2022 முடிவைப் பார்க்கவும் - இங்கே கிளிக் செய்யவும்
NEET PG 2022 முடிவை சாதனையாக 10 நாட்களில் அறிவித்ததற்காக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தை (NBEMS) மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார். அவர், இந்த பாராட்டை தனது ஆதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார்.
ஒன்றிய அரசில் 2065 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்
நீட் முதுகலை 2022 முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம் (How To Check NEET PG Result 2022):
- அதிகாரப்பூர்வ இணையதளம்- nbe.edu.in சென்று "NEET PG" இணைப்பைக் கிளிக் செய்யவும்
- இப்போது, "முடிவுகள்" தாவலைக் கிளிக் செய்யவும்
- NEET PG 2022 முடிவு PDF திறக்கப்படும்
- எதிர்கால குறிப்புக்காக சேமித்து பதிவிறக்கவும்
மேலும் படிக்க:
Share your comments