விவசாய நிலங்களில், ஈரப்பதத்தை அளவிடுவது கடினமாக இருந்து வந்த நிலையில், தற்போது கோவையைச் சேர்ந்த 5 விஞ்ஞானிகள் மண்ணின் ஈரப்பதத்தை (Soil moisture) அளவிட புதிய கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள்.
விஞ்ஞானிகளுக்கு விருது:
கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து பேருக்கு, தேசிய நீர் விருதை (National Water Award) மத்திய நீர்வள அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகம் (Central Ministry of Water Resources) 2019-க்கான தேசிய நீர் விருது வழங்கும் விழாவை டில்லியில் (Delhi) நடத்தியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (Venkaiah Naidu) பங்கேற்ற இவ்விழாவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர், தேசிய நீர் விருதை, கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளான ஹரி, புத்திர பிரதாப், முரளி, ரமேஷ்சுந்தர், சிங்காரவேலு ஆகியோருக்கு காணொலி வாயிலாக வழங்கினர். விருதுடன் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
மண்ணின் ஈரப்பதம் அளவிடும் கருவி
மண் ஈரப்பதங் காட்டி (Show soil moisture) கருவி கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. ''விவசாய நிலத்தில் நீர்கட்டுதல், நீர் பாய்ச்சாமல் இருப்பது ஆகியவற்றை முடிவெடுப்பதில் இக்கருவி உதவி புரியும்,'' என, கோவை கரும்பு இனப்பெருக்கு நிலைய முதன்மை விஞ்ஞானி ஹரி கூறினார். இக்கருவியில் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து, வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் (Lights) ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ணங்களின் மூலம் விவசாயிகள் நீர் கட்டுவதா, வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம்.
குறைந்த விலை அதிக மகசூல்:
ஈரப்பதம் அளவிடும் கருவியைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்ட கரும்பு வயலில் ஏக்கருக்கு 60.4 டன் மகசூலும் (Yield) பயன்படுத்தாத வயலில் 55.8 டன் மகசூலும் கிடைத்துள்ளது. இக்கருவியின் விலை தற்போது 1,500 ரூபாய். இது குறித்த விபரங்களை http://sugarcane.icar.gov.in மற்றும் http://caneinfo.icar.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30! காஞ்சிபுரம் வேளாண் மையம் அறிவிப்பு!
விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!
Share your comments