வங்க கடல் பகுதியில் புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதையடுத்து, தமிழகத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தாழ்வு மண்டலமாக
வடகிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வலுவடைய வாய்ப்பு
இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குறிப்பாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப்பகுதிகளில், இன்று பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments