Credit : Daily Thandhi
நள்ளிரவில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை அறிய வீடுகள், தோட்டங்களில் பாட்டில்களை மக்கள் தொங்க விடுகின்றன. வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால், பாட்டில்களின் சத்தம் மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி வனவிலங்குகளின் வரவை உறுதி செய்யும். ஆனால், வனவிலங்குகள் (Wildlife) தானாக ஊருக்குள் வருவதில்லை. காட்டில் இருக்கும் வளங்களை மனிதன் அழித்ததால் தான், உணவு மற்றும் நீர் தேடி வனவிலங்குகள் வெளிவருவதை நாம் உணர வேண்டும்.
காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் காட்டுயானைகள் வழிதவறி ஊருக்குள் நுழைந்ததால், அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் செய்வதறியாது, வீடுகளில் மோதியுள்ளன. மேலும் விவசாய நிலங்களில் இறங்கியதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் யானைகள் அல்ல, காட்டு வளங்களை அழித்த மனிதனே.
வனவிலங்குகள் வரவால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரவில் தங்களது வீடுகளில் பொதுமக்கள் அயர்ந்து தூங்கிய பிறகு ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை (Precautions) கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண பொதுமக்கள் நூதன முறையை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.
காலி பாட்டில்கள்
அதாவது கூடலூர், பந்தலூர் தாலுகாவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கயிறு கட்டி பாட்டில்களை தொங்கவிட்டு உள்ளனர். அதை காட்டுயானைகள் கடந்து செல்லும்போது பாட்டில்கள் ஒன்றோடொன்று உரசி சத்தம் எழுப்புகின்றன. இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து கொள்கின்றனர். மேலும் பாட்டில்கள் உரசி எழும் சத்தம் காரணமாக சில நேரங்களில் காட்டுயானைகளும் திரும்பி சென்றுவிடுகின்றன.
ஊருக்குள் வருவதை அறிய
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டுயானைகள் தொடர்ந்து வீடுகள், விவசாய நிலங்களில் இறங்குவதால் பயிர்கள் சேதம் அடைகிறது. நள்ளிரவில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை அறியும் வகையில் காலி பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளோம். இதன் மூலம் எழும் சத்தத்தை கொண்டு காட்டுயானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!
தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா
Share your comments