மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கோவிட்-19 நோயை உண்டாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறையும் பாதிப்பு (Decreased vulnerability)
இந்தியாவில் அண்மைகாலமாகக் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக கோவிட் பாதிப்பு ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் புதிய வகைகளாகக் கிளைத்துக் கொண்டிருக்கின்றன.
டெல்டா பிளஸ் (Delta Plus)
எளிதில் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸானது உருமாறி 'டெல்டா பிளஸ்' அல்லது ஏ.ஒய் 1 வகையை உருவாக்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும் அவை இன்னும் கவலை தரும் வகையாக இல்லை என்றும் தெரிவித்திருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது.
3-வது அலை (3rd wave)
அதேநேரத்தில் மஹாராஷ்டிர அரசு 'டெல்டா பிளஸ்' மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
புதிய வைரஸ் (New virus)
போபாலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த வகை வைரஸின் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது எனவும் மத்திய பிரதேச மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)
இதனிடையே இந்தியாவில கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தினர்.
5 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த பங்கேற்றனர்.
அதிக பாதிப்பு இருக்காது (There will not be much damage)
இதில் குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும், கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
Share your comments