வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் நேற்கு நோக்கி நகர்ந்து மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று இரவுக் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் (Niver Cyclone)
நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு 310 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ள நிவர் புயல், தீவிர புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி, 6 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே, இன்று இரவு 'நிவர்' புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று வீசும் (Heavy Wind)
நிவர் புயல் கரையை கடக்கும் வேளையில் மணிக்கு 145கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சூறைக்காற்றோடு கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னென்னச்சரிக்கை கருதி, அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மடங்கு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு விடுமுறை (Holiday)
நிவர் புயல் காரணமாக பொதுவிடுமுறையை அறிவித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்காது என்றும் அறிவித்துள்ளது. சென்னை- குமரி இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயும் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precaution steps)
புயலையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது . அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயாரிநிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும் சமயத்தில் பாதுகாப்பு நடவடிக்கை கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், புயல் காற்று தாக்கி சேதமையும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தயார் நிலை (Keep it ready)
புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள்ளது. 5 வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் ஒரு டைவிங் குழு சென்னையில் தயாராக உள்ளது. மேலும், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் ஆகிய பகுதிகளில் கடற்படைப் பிரிவை சேர்ந்த வெள்ள நிவாரணக் குழு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் கடற்படையை சேர்ந்த கப்பல் ஐ.என்.எஸ் ஜோதி தேவைக்கேற்ப உதவிகளைச் செய்ய அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மரம் நட விரும்புபவரா நீங்கள்? களம் அமைத்துத் தருகிறது ஈஷா!
அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
Share your comments