1. செய்திகள்

வட்டி உயர்வுக்கு இனி வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவு!

R. Balakrishnan
R. Balakrishnan

Repo Rate

2023 ஆம் நிதியாண்டிற்கான இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று (ஏப்ரல் 3) அன்று தொடங்கியது. இக்கூட்டம் ஏப்ரல் 6 அன்று முவடையும். அதில் உள்நாட்டி காரணிகள் குறித்து, உலக அளவில் பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

நிதிக் கொள்கை கூட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் இந்த வாரம் தொடங்கியுள்ளதால், ரெப்போ வட்டி விகிதங்கள் உயர்த்துவதோ அல்லது குறைப்பது குறித்து RBI அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 6.5 சதவீத ரெப்போ வட்டி விகிதம் கடைசியானதாக இருக்கலாம் என எஸ்பிஐ ரிசர்ச் அதன் சமீபத்திய ஈகோவ்ராப் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரெப்போ விகிதம் என்பது அனைத்து வணிக வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி விதிக்கும் கடன் வட்டி விகிதமாகும்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதைப் பார்க்க முடிகிறது. சர்வதேச அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மார்ச் மாதத்துக்கான அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம்

ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒரு புறம் இருக்க, இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022-23 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் இந்த ஏப்ரல் மாதக் கூட்டத்தில் ரெப்போ விகித உயர்வு இடைநிறுத்தம் குறித்த ரிசர்வ் வங்கிக்கு ஆலோசிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் உயர்த்தவும் வாய்ப்புள்ளதால் மக்கள் அனைத்திற்கும் தயாராகவே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க

Post Office கணக்கு இருக்கா? அப்போ இது கட்டாயம்: அரசின் முக்கிய உத்தரவு!

ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் சுட்டெரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

English Summary: No more chance of interest rate hike: key decision in reserve bank meeting!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.