சென்னை மாநகரத்தின் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நிகழ்ந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியல், மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளை அளித்தார்.
அப்போது டாஸ்மாக் கடைகளில் 90 நாட்களுக்கு மேல் மது வகைகள் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து வகை மதுபானங்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்றும், மேலும் மதுபானக் கடைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன்படி மதுவகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை அவசியம் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
மதுபானக் கடைகளுக்கு மாவட்ட மேலாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கடைகளை திறப்பதற்கு முன்பு மேலாளர்கள் உட்பட ஊழியர்கள் யார் டாஸ்மாக் கடைகளில் உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அனுமதியின்றி இடமாறுதல் உத்தரவு வழங்க கூடாது. கடைக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட மேலாளர்களால் முடியாத கோரிக்கையை முதுநிலை மண்டல மேலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களாலும் நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்றால் மட்டுமே மேலாண்மை இயக்குனரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
ஒரு ரேஷன் கடையில் 3 வருடங்கள்தாங்கோ!
Share your comments