
ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதி நிர்ணய விதிகளில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் இனி ரேஷன் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பசியைப் போக்க (To quench hunger)
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வயிற்றுப்பசியைப் போக்கும் நோக்கத்தில்தான், ரேஷன் அட்டை தாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பொருளாதாரத்தின் அடிப்படையில் 3 வகையில் கார்டுகள் பிரிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் உணவுப் பொருள்களால் வறுமை பெருமளவு போக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்திட்டம் செயல்பட்டது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்திலும் நிவாரணப் பொருள்கள், நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டன.
இந்த சூழலில் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் கிடைப்பது என்பது இனி வரும் நாள்களில் சாத்தியமாகாது என்ற சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில், ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதி நிர்ணய விதிகளில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான, பணி கிட்டத் தட்ட நிறைவடைந்துள்ளன. மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்று ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது.
80 கோடி பேர் (80 crore people)
தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூறியுள்ளது. அவர்களில் பொருளாதார ரீதியாக வளமாக உள்ள, பணம் படைத்தவர்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள பொது விநியோகத் துறை, இதை மனதில் வைத்து, தகுதியானவர்கள் மட்டுமே பலனை அடையும் வகையில் தர நிலைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக, மாநிலங்களில், ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் விதிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, புதிய விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
புதிய விதிகள் (New rules)
புதிய விதிகள், இந்த மாதம் இறுதி செய்யப்படும். புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும், தகுதியற்றவர்களுக்கு பலன் கிடைக்காது. பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ள மக்களும் இந்த சேவையை பெற்று வரும் வேளையில், தேவைப்படுபவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரேஷன் பொருள்கள் இனி வரும் காலங்களில் விநியோகிக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதனை உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க...
நீங்கள் நத்தை சாப்பிடுவதற்கு 5 அற்புதமான காரணங்கள்
பீட்ரூட்டின் பக்க விளைவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள்
Share your comments