தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு (Night Lockdown) வாய்ப்பில்லை என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மற்றும் புதிய ஓமைக்ரான் வேரியண்ட் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டம் (Discussion)
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல பரிந்துரைகள் பரீசலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு இல்லை (No Night Lockdown)
இரவு நேர ஊரடங்கால் பயணில்லை. எனவே, பொது இடங்களான வணிக வளாகங்கள், கூட்டம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments