1. செய்திகள்

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய சான்று தேவையில்லை

T. Vigneshwaran
T. Vigneshwaran
LPG Gas Cylinder

மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆதார் அட்டை இல்லாமலோ முகவரி ஆதாரம் இல்லாமலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரை (LPG cylinder ) வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் எல்பிஜி  பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முன்னதாக, விநியோகஸ்தர்களும் நிறுவனங்களும் சிறிய எல்பிஜி சிலிண்டரை  முன்பதிவு செய்ய ஆதார் அல்லது முகவரி சான்றுகளை காண்பிக்க வேண்டும். ஆனால்  IOCL அமல்படுத்திய புதிய விதிகள் வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள இந்தேன் எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது விற்பனை இடத்திற்கு சென்று  5 கிலோ எல்பிஜி சிலிண்டரை வணிக முடியும். புதிய 5 கிலோ சிலிண்டரை வாங்க, வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டைக்கு பதிலாக  எந்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அல்லது சான்றை வழங்கலாம்.

இந்தேனிலிருந்து 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை வாங்குவதற்கான முகவரி ஆதார சான்றுகளை நீங்கள் பகிர வேண்டியதில்லை. உங்கள் எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விநியோகஸ்தர்களிடமோ அல்லது விற்பனை செய்யும் இடத்திலோ நிரப்பிக் கொள்ளலாம். இந்த 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்றவை.

இன்டேன் வாடிக்கையாளர்கள் இனி சிலிண்டர் வேண்டாம் என்றால்,  திருப்பித் தரலாம். 5 ஆண்டுகளுக்குள் எல்பிஜி சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் திருப்பி தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பித் தரப்படும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதை திருப்பித் தந்தாள் ரூ.100 கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமும் முன்பதிவு செய்யலாம். இந்தேன் 8454955555 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது. சிலிண்டரை மிஸ்ட் கால் மூலம் முன்பதிவு செய்யலாம். சிலிண்டரை ரீபில் செய்ய, வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணில்  செய்தி அனுப்பலாம் அல்லது அழைக்கலாம்.

இந்தேன் சமீபகாலத்தில் ஒரு புதிய சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சிலிண்டரில், எவ்வளவு எரிவாயு மிச்சம் உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.இந்த புதிய சிலிண்டருக்கு காம்போசிட் சிலிண்டர் என்று பெயரிடப் பட்டுள்ளது.

மேலும் படிக்க:

டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்!

விவசாயிகளுக்காகப் பசுமைப் பேருந்து சேவை-தமிழகத்திலும் தொடங்கப்படுமா?

English Summary: No proof is required to book a small LPG cylinder Published on: 19 July 2021, 08:43 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.