1. செய்திகள்

எதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு

KJ Staff
KJ Staff
Northeast Monsoon

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் 2019 - ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவினை வெளியிட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே பெய்தது. அதே போன்று பெய்யவிருக்கும் வடகிழக்கு மழையானது கடந்த வருடத்தை காட்டிலும் சற்று கூடுதலாகவே இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை ஆஸ்திரேலிய நாட்டின் மழை மனிதன்' என்ற கணினியின் துணை கொண்டு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதி மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும்  காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி  நடப்பாண்டுக்கான பருவமழை கணக்கிட பட்டது. அதே போன்று தற்போது வடகிழக்கு பருவமழையும் கணக்கிடப் பட்டுள்ளது. சேகரிக்கப் பட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை 60% சராசரி மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான அறிவுப்பு

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட  அதிக அளவு பெறப்பட்டதால், தற்போது  நிலமானது விதைப்புக்கு ஏற்றவாறு உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விதைப்பு பணியை தொடங்கலாம். பயிர்கள் நன்கு வளர்வதுடன், பயிருக்கு தேவையான முதன்மை நீர் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
கோயம்பத்தூர் – 641003
தொலைபேசி
0422 - 6611319/ 6611519 

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Northeast Monsoon 2019: Tamilnadu Agriculture University Shared Average Rainfall Information Published on: 17 October 2019, 12:13 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.