தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.கடந்த இந்த ஆண்டை விட அதிக அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருநாள் முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெய்தது வருகிறது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
நேற்றிரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments