புத்தகங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சூரிய சக்தியால் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர்.
விவசாயின் சூரிய கார்
ஒடிசாவைச் சேர்ந்த சுஷில் அகர்வால் என்ற விவசாயி தனது ஊரடங்கு காலத்தை இந்த கண்டுப்பிடிப்புக்காக செலவிட்டுள்ளார். சூரிய சக்தியில் இயங்கும் காரை 850 வாட்ஸ் மோட்டார், 100 ஏஎச்/54 வோல்ட்ஸ் பேட்டரியில் இந்தக் கார் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்த பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக 8.5 மணி நேரம் ஆகும், 10 ஆண்டுகள் வரை உழைக்கும்.
3 மாதத்தின் உழைப்பு சூரிய கார்
இது குறித்து பேசிய விவசாயி சுஷில் அகர்வால், தனது ஊரடங்கு காலத்தில் தான் கார் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இந்த வாகன தயாரிப்பு பணிகள் முழுவதும் தனது பணிமனையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், தனது நன்பர் மற்றும் இரண்டு மேக்கானிக்குகள் உதவியுடன் இதனை செய்ய முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூரிய சக்தியால் இயங்கும் காரை தயாரிக்க தனக்கு 3 மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் விவசாயி குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு காலம் முடிந்த பின், பெட்ரோல் விலை அதிகரிக்கும் என்று எதிர்ப்பாக்கப்பட்டதால் இந்த காரை தயாரிக்க திட்டமிட்டதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க....
கூடுதல் மகசூல் தரும் கலப்புப் பயிர் சாகுபடி!
கால்நடைத் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் நேப்பியர் புல் சாகுபடி!
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!
Share your comments