தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற்பத்தி துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
தொடர் மழை - பயர்கள் பாதிப்பு
நிவர், புரெவி மற்றும் தொடர் மழை காணமாக தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து மாவடங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விளைநிலங்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்டா பகுதிகளில் மத்திய குழுவினர் ஏற்கனவே ஆய்வு செய்த நிலையில், அதைத்தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் அலுவலர்கள் ஆய்வு
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வேளாண் ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, தொடர் மழையால் பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறையினர், வேளாண் துறையினர் தோட்டக்கலைத் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை
பயிர் சேதம் குறித்த அறிக்கைகளை ஜனவரி 29-ம் தேதிக்குள் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களிடம் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். பயிர் அறுவடை சோதனைகளை விரைவாக முடித்து முன்கூட்டியே இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ககன்தீப் சிங் பேடி.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு
இதனிடையே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், பயிர் சேதம் குறித்து வேளாண் அலுவலர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், பயிர் பாதிப்படைந்த எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்றும், சீரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
பசுமைக்குடில் அமைக்க ரூ.4.67 லட்சம் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
வேளாண் சட்டங்கள் குறித்த ஆலோசனை துவக்கம்! விவசாய அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது சமரசக் குழு!
Share your comments