ஒமிக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஒமிக்ரான் பரவல் (Omicron diffusion)
உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அனைவரும் உணர்ந்தோம். ஆனால் அதற்குள் உருமாறி உருமாறி தன் ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன.
குறையும் என எதிர்பார்ப்பு (Expectation to decrease)
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் அதிக செலவழித்து தடுப்பூசிகளை செலுத்தும் பணியை துரிதப்படுத்தின.மே மாதத்திற்கு பிறகு ஓரளவு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்து அப்படியே மறைந்து விடும் என மக்கள் நினைத்தனர்.
ஆனால் அங்குதான் ட்விஸ்ட் வைத்தது கொரோனா. கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம் மிக்கது, பரவும் தன்மை அதிகம், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.
கொண்டாட்டங்களுக்குத் தடை (Ban on celebrations)
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்ககப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டனில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டிய வண்ணம் உள்ளது.
அபாய கட்டம் (Risk phase)
இந்த நிலையில் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments