ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல; இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும்' என்கிறார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கணேசன்.
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை. நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி என்பது, இந்த நோய்க்கானது மட்டுமல்ல, அனைத்து நோய் தொற்றையும் தடுக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியாகும். இந்த நோய் குறித்து மக்களுக்கு அதீத பயம் இருக்கிறது; அது தேவையில்லை.
உயிருக்கு ஆபத்து வராது
கொரோனா, ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் பயப்படாமல், தனிமை படுத்திக்கொள்ளுங்கள். உயிர் பயத்தில் நடுங்க வேண்டாம். ஸ்டீராய்டு இல்லாமல் நன்றாக மூச்சு விட, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மூச்சு பயிற்சி செய்வது அவசியம்.
குளிர்ந்த பானங்களை சாப்பிடுவதை தவிர்த்து, எப்போதும் சுடுதண்ணீர் குடிப்பது அவசியம். மது பழக்கம் இருப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். அவர்களை ஒமைக்ரான் எளிதாக தாக்கும். நோய் காலம் முடியும் வரை, மதுவை தவிர்ப்பது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.
பாசிட்டிவ் வந்தால் என்ன செய்யணும்?
''பாசிட்டிவ்' என தெரிந்தவுடன், உடனே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க தேவையில்லை. ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல. இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும். நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினம் மூன்று வேளை ஆவி பிடித்தல் அவசியம். ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் அணிந்து, வீட்டில் தனிமையாக இருப்பது அவசியம். வீட்டில் இருப்பவர்களும் மாஸ்க் தவறாமல் அணிய வேண்டும்,'' என்கிறார் டாக்டர் கணேசன்.
மேலும் படிக்க
கொரோனாவோடு இணைந்து உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்!
தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா? பொங்கலுக்கு பிறகு அறிவிப்பு!
Share your comments