ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொலைகாரக் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகள் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
பின்னர் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதைடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும், பாடங்கள் நடத்திமுடிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
9 நாட்கள் விடுமுறை (9 days holiday)
இருப்பினும், டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பட்டு, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கோரிக்கை (Request)
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் தற்போது திறந்திருப்பதால் மாணவர்களுக்கு ஒமிக்ரான் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவர்களை உடனடியாக மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
விரைவில் அறிவிப்பு (Notice coming soon)
இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும் போது பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி!
5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!
Share your comments