மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தையும் ஆட்டிப்படைத்தது. ஆயிரக்கணக்கானோரைப் உயிர்பலி வாங்கியதுடன், லட்சக் கணக்கானோரைப் பாதிப்புக்கு ஆளாக்கியது.
இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு எனப் பல்வேறு தீவிர நடவடிக்கைகளின் மூலம் கொரோனோத் தொற்றுப்பரவல் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பபட்டது. அதாவது தற்போதும் கொரோனா தினசரி பாதிப்பு 500க்கும் மேல் உள்ளது.
நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை ஓரளவுக்குத் திரும்பியது.இதனிடையே அடுத்துடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வும், வடகிழக்குப் பருவமழைத் தீவிரமும், தமிழகத்தை வெள்ளத்தில் மிதக்க விட்டது.
25 நாடுகளில் (In 25 countries)
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் ஒருவழியாவை இந்தியாவிலும் கால்தடம் பதித்துவிட்டது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தப் பரவல் தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தீவிரமடைந்து வருகிறது.
160 பேர் (160 people)
இது குறித்து கூறப்படுவதாவது: உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்படும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்று காரணமாக இது வரையில் சுமார் 160 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடரந்து வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருவபர்கள் கண்காணிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வோடு கண்காணிக்கும் படி அறிவுறுத்தி உள்ளது.
இந்தியவை பொறுத்தவரையில் கர்நாடகம், குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பு 21 ஆனது (The impact was 21)
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் சுமார் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் 8 பேருக்கும், புனேவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
எனவே மக்கள் சற்றுக் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் மட்டுமேப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments